fbpx
Homeபிற செய்திகள்கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் நடத்திய ரோட்டரி சங்கம்

கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் நடத்திய ரோட்டரி சங்கம்

ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்பிக் நகர், ஏ.எம். ஃபௌண்டேஷன் இணைந்து, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கிம்ஸ் மருத்துவமனை உடன் இணைந்து சாண்டி கல்லூரி ஆஃப் எஜுக்கேஷன் வளாகத்தில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது.

இம்முகாம் ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி இன்டர்ஆக்ட் கிளப் மாணவர்கள் மற்றும் சாண்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இன்டர்ஆக்ட் கிளப் மாணவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமை ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3212 ஆளுநர் ஜே.தினேஷ் பாபு மற்றும் எஸ்.பி.ஐ.சி லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் ஈ.பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கிம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள், இதய நோய்கள், நீரிழிவு, மூச்சுப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு ஆலோசனைகள் வழங்கினர். மேலும், தேவையான நோயாளிகளுக்கு இசிஜி, எக்கோ பரிசோதனைகளுடன், ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பலரும் முகாமில் பங் கேற்று மருத்துவ நலனை பெற்றனர்.

இம்முகாமில் முன்னாள் மாவட்ட டாக்டர் ஷேக் சலீம் கலந்து கொண்டு பாராட்டுத் தெரி வித்தார். முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்து ரோட்டரி தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ஆர்.விஷ்ணு பிரியா, திட்டத் தலைவர் பாலமுருகன், ஒழுங்கு படுத்துநர் ஜி.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினர்.

முகாமை நடத்துவதற்கு முழு ஆதரவு வழங்கிய சாண்டி குழும கல்வி நிறுவனங்கள் துணைத் தலைவர் எஸ்.பி.சாண்டி மற்றும் செயலாளர் சிவசங்கர் ஆகியோருக்கு ரோட்டரி கிளப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img