fbpx
Homeபிற செய்திகள்பிரான்ஸ் நிறுவனத்துடன் அம்ருதா விஸ்வ வித்யாபீடம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரான்ஸ் நிறுவனத்துடன் அம்ருதா விஸ்வ வித்யாபீடம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அம்ருதா விஸ்வ வித்யாபீடம், பிரான்ஸின் முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் Grandes Écoles-ன் உறுப்பினராகவும் உள்ள IMT Atlantique உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், நான்டெஸில் உள்ள அந்நிறுவன வளாகத்தில், அதன் தலைவர் பேராசிரியர் கிரிஸ்டோஃப் லெரூஜ் மற்றும் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் ப்ரோவோஸ்ட், பேராசிரியர் மணீஷா வி.ரமேஷ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, ஆராய்ச்சி, கூட்டு கல்வி திட்டங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையேயான பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவடையச் செய்கிறது. இது அம்ருதாவின் Live-in-Labs செயல்முறை கற்றல் முன் முயற்சியுடன் குறிப்பிட்ட ஈடுபாட்டையும், பரஸ்பர தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட துறைகளில் கூட்டுச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

IMT Atlantique, பிரான்சின் முன்னணி 10 நிறுவனங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் தொழில்துறையில் உலகள வில் 115-வது இடத்தைப் பெறுகிறது. இதன்மூலம் சர்வதேச தரவரிசையில் இடம்பெற்றுள்ள 48 பிரான்ஸ் நிறுவனங்களில் 8-வது இடத்தைப் பெற்றுள்ளது.

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் மணீஷா வி.ரமேஷ், பேராசிரியர் மனோஜ் (டீன்), பேராசிரியர் ஷ்யாம் திவாகர் மற்றும் டாக்டர் ராஜா சுந்தர் ஆகியோரின் குழு கோவை முகாமிலிருந்து நான்டெஸ் வளாகத்தைப் பார்வையிட்டு, மூத்த நிர்வாக உறுப்பினர்களுடன் ஆராய்ச்சி கூட் டாண்மையை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய கல்வி ஈடுபாட்டை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

படிக்க வேண்டும்

spot_img