fbpx
Homeபிற செய்திகள்உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் கரூரில் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் கரூரில் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதா னத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மாவட்ட அளவி லான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது. முதல் நாள் போட்டிகளில் பெண்களுக்கான போட் டியை சட்டமன்ற உறுப் பினர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
போட்டியில் 14 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். மற்றும் பொது பிரிவில் வயது வரம்பு இல்லாத பெண் களும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மூன்றாம் பரிசு 15 ஆயிரம் என மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் பெண்களுக்கான பரிசுத் தொகையாக வழங்க உள்ளனர்.
கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண் டனர். முதல் சுற்று நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பிக்சர்ஸ் போடப்பட்டு தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆண்களுக்கான சிலம்ப போட்டிகளும் நடை பெற்றன.

படிக்க வேண்டும்

spot_img