fbpx
Homeபிற செய்திகள்நந்தா கல்லூரியில் வள்ளுவர் மறை விழா

நந்தா கல்லூரியில் வள்ளுவர் மறை விழா

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வெற்றித் தமிழர் பேரவையின் “வள்ளுவர் மறை – வைரமுத்து உரை” கையொப்பத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ.பிரகாஷ். ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, கல்லூரி தலைவர் வெ.சண்முகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்து, வள்ளுவர் மறையின் மாபெரும் பொருளியலைப் பற்றிய ஆழமான கருத்துகளைப் பகிர்ந்தார்.

இவ்விழாவில் எம்எல் ஏக்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி. வெங்கடா சலம் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், கல்லூரி செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப் மற்றும் திருமூர்த்தி, பேரவை நிர்வாகிகள் பி ஆர்.வேலுமணி, இரா. வெண்ணிலா, கோ.வெ.கும ணன் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img