கோபி அருகே ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான வரவேற்பு விழா நடை பெற்றது.
முன்னாள் அமைச்சரும், கல்லூரிச் செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
கல்லூரித் தலைவர் பெ.வெங்கடாசலம், தலைமை நிர்வாக அலுவலர் க.கௌதம், அறங்காவலர் கவியரசு, கல்லூரிகளின் முதல்வர்கள், மருத்துவர்கள் கே.சி.கே. யுவராஜா, நந்தகுமார், இளங்கோ, முத்துக்கண்ணு அம்மா, பியூலா வைலட் தங்கம் ஆகியோர் மருந்தியல் துறையின் முக்கியத்துவம், சமூகத்தில் மருந்தாளுநர்களின் பங்கு மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.



