fbpx
Homeபிற செய்திகள்வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கினார், நயினார் நாகேந்திரன்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கினார், நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கடந்த 2023 ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாரதிய ஜனதா கட்சி தற்போது வீடுகளை இழந்தவர்களுக்கு புதியதாக ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கால்வாய் மற்றும் செம்பூர் நாணல் காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது
இதில் பாஜகவின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா. துணைத் தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் .மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் ஒன்றிய தலைவர் சங்கர் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் வீடுகள் வழங்கியதோடு பயனாளிகளுக்கு பசுமாடு வழங்கப்பட்டது. மேலும் 100 நபர்களுக்கு மேல் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருபதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தையல் மிஷின் வழங்கினார்கள். அதேபோல் நேபாளில் நடந்த சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழும் கேடையமும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் தளபதி பிச்சையா, வழக்கறிஞர்கள் வெங்கடாசலம், சுரேஷ்குமார் வாரியார், ஒன்றிய தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் மணிகண்டன், கருங்குளம் சங்கர் உட்பட பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அணிப்பிரிவு நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img