Homeபிற செய்திகள்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கடலூர் மாவட்டம் -கிள்ளை பேரூராட்சியில் 2-ம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மலர் தலைமை தாங்கினார். ராஜ் வரவேற்றார். முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா,துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் 16 துறை அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற் றனர். முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவபெட் டகமும் வழங்கப்பட்டது.
முகாமில் கூட்டுறவு வங்கி செயலர் வெங்கடேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், மதுரை செல்வி, குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மலையரசன், சப்-இன்ஸ் பெக்டர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img