fbpx
Homeபிற செய்திகள்இளம் நோயாளிக்கு அரிதான அறுவை சிகிச்சை செய்து சென்னை சிம்ஸ் மருத்துவமனை சாதனை

இளம் நோயாளிக்கு அரிதான அறுவை சிகிச்சை செய்து சென்னை சிம்ஸ் மருத்துவமனை சாதனை

ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவர் அவ திப்பட்டு வந்தார்.
இரு மாதங்களாக கடுமை யான சுவாசப் பிரச்சனைகள் இந்த இளைஞருக்கு இருந்திருக் கின்றன. கேரளாவில் பல மருத்துவ மனைகளுக்கு சென்றபோது பளிங்கு பெருந்தமனி (கடுமையாக இறுகி, கடினமான மற்றும் எளிதில் நொறுங்கக்கூடிய முக்கிய இரத்தக்குழாய்) மற்றும் “ஒடுங்கிய பெருந்தமனி வால்வு” (இதயத்திலி ருந்து இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்துகின்ற வால்வு குறுகியி ருப்பது) என்ற இரண்டு கடுமை யான இதயப் பிரச்சனைகள் அரிதாக ஒருங்கிணைந்திருப்பது பரிசோத னைகளில் கண்டறியப்பட்டன.

இந்நிலையில் இந்த இளம் நோயாளி, சென்னையின் சிம்ஸ் மருத்துவமனையில் பெருந்தமனியில் இரத்தநாள அழற்சிக்கான சிகிச்சை மையத்திற்கு வருகை தந்தார்.
மிக அதிகமாக கால்சியம் படிந்த பெருந்தமனி மீது தான், பெருந்தமனி வால்வு இருக்கிறது. கால்சியம் படிந்த கடினமான பெருந்தமனியில் தையலிடும் அசாதாரண சவாலை எதிர்கொண்ட நிபுணர்களின் குழு ஒரு மெக்கானிக்கல் பெருந்தமனி வால்வு மாற்றும் செயல்முறையை திறம்பட மேற்கொண்டது.

ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை, இதய மற்றும் பெருந்தமனி நோய்களுக்கான சிகிச்சை மையத்தின் இயக்குனரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். வி.வி.பாஷி மற்றும் இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுண ரான டாக்டர்.முகமது இத்ரீஸ் ஆகியோர் வெற்றிகரமாக மேற் கொண்டனர். உணர்விழப்பு மருந்தியல் நிபுணர்களான இதய மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜு ஜேக்கப், மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர். ஏ. அருண்குமார் ஆகியோ ரின் சிறப்பான ஆதரவோடு செவி லியர்கள் மற்றும் பிற மருத்து வப்பணியாளர்கள் குழுவின் பங்களிப்பும் இந்த சிகிச்சையின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
இது குறித்து டாக்டர். பாஷி கூறுகையில், “நோயாளியின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எமது குழுவினர், ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளை மிக கவனமாக மதிப்பாய்வு செய்து சிகிச்சை திட்டத்தை துல்லியமாக வகுத்து அதனை செயல்படுத்தினர்” என்று கூறினார்.

இதய மார்பறை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் பேசுகையில், “சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள எமது குழு, கவனமாக திட்டமிடல் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இடர்வாய்ப்புகளை குறைப் பதற்கு தேவையான அனைத்து முன்னெச் சரிக்கை நடவடிக் கைகளையும் எடுத்த பிறகு மிக துல்லியமாக இந்த மருத்துவ செயல்முறையை மேற்கொண்டது” என்று கூறினார்.
சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து, பேசுகையில், “எமது அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவின் இச்சாதனை, மருத்துவ செயல்தளத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றே கருதப்படுகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img