திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சி த்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சாலை மேம்பாட்டு பணிகள் குடிநீர் திட்டப்பணிகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகள் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் பணிகள், வாடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் ஏரி குளங்கள் சீரமைக்கும் பணிகள் போன்ற பல்வேறு மேம்பாட்டு திட்டப்பணிகள் நிறை வேற்றப்பட்டுள்ளது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து திருவண்ணா மலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும் தராமாகவும் முடிக்க அறிவுறுத்தி வருகிறார்கள்.
அதன்படி நேற்றைய தினம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் கற்றல் திறனையும், அடிப்படை வசதிகளையும் உணவு கூடத்தில் உணவினை உண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சீட்டம் பட்டு ஊராட்சியில் சிறு பாசன ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.8.40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாடியம்புதூர் சிறுபாசன எரி புனரமைத்தல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும் சீட்டம்பட்டு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 0240 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வழங்கப்பட்ட நிதிகள் குறித்து விவரங்களை பயனாளியிடம் நேரில் கேட்டறிந்தார்.
இந்த செய்தியாளர் ஆய்வின் போது ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் டாக்டர். மணி கலசபாக்கம் வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ராஜேஸ்வரி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



