கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனையில் மரம் நடுவிழா நிகழ்ச்சி மற்றும் கேஎம் சிஹெச் சூலூர் பல்துறை மருத்துவமனையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனையில் செப்டம் பர் 29 அன்று நடைபெற்ற மரம் நடுவிழாவில் கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, அரவிந்தன் நர்சிங் ஹோம் டாக்டர் கே.சுவாமிநாதன், எஸ்எஸ் குளம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கே. கோமளவள்ளி, பிளாக் மருத்துவ அதிகாரி டாக்டர் ஏகனா பிரபு, கோயமுத்தூர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜ், எஸ்எஸ்குளம் பஞ்சாயத்து யூனியன் உதவி தலைவர் விஜயகுமார், எஸ்எஸ் குளம் பஞ்சாயத்து யூனியன் செயல் அதிகாரி எம்.செந்தில் குமார், கோவில்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வா ளர் இளங்கோ மற்றும் கேஎம்சி ஹெச் கோவில்பாளையம் மருத்து வமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் விமல்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கேஎம்சிஹெச் சூலூர் பல்துறை மருத்துவமனையில் மாரத்தான் நிகழ்ச்சியை கோயமுத்தூர் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பி.தங்கராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, மருத்துவ இயக்குனர் டாக்டர் ஏ.என்.முருகன் மற்றும் கேஎம்சிஹெச் சூலூர் மருத்துவ இயக்குனர் டாக்டர் சி.ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இருதய சிகிச்சைக்காக கேஎம்சிஹெச் சூலூர் மற்றும் கோவில்பாளையம் மருத்துவம னைகளில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் அதிநவீன வசதிகளும் உள்ளன.
சூலூர் மருத்துவமனையில் கேத்லேப் வசதி உள்ளது. இது கேஎம்சி ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனைக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.



