கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலில் கரிஷ்மா 2025 கலை விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செய லர் யசோதா தேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் பிபல ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 4 மற்றும் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களும் பின்னனி பாடகர்களுமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ராஜகணபதி மற்றும் கேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் ராஜில் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு பேசினர்.

இதில், கோவை, ஈரோடு, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதில், ஓவியம், புகைப்படம் எடுத்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஹாரத்தி முன்னிலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. புவியரசு இணைந்து போட்டி முடிவுகளை அறிவித்தார்.

இதில் கரிஷ்மாவின் சிறந்தவர் என்ற பட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைகழகத் தில் பயிலும் கார்த்திக்கும், இரண்டாவது கரிஷ்மா பட்டத்தை விஎல்பி கல்லூரி மாணவர் விஷ் ணுரத்திஷ், மற்றும் மூன்றாவது கரிஷ்மா பட்டத்தை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர் லக்ஷன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.



