fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளின் இதய குறைபாடுகள், புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

குழந்தைகளின் இதய குறைபாடுகள், புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், இதயக்குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், நேற்று ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் என்ற விழிப்புணர்வு மாரத்தான் 3-ம் பதிப்பு நடத்தப்பட்டது.
புற்றுநோய் மற்றும் குழந்தைக ளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக காலை 6.00 மணிக்கு கோவை பாப்பநாயக் கன்பாளையம்,
மணி மேல்நிலைப் பள்ளியில் இருந்து இந்த மாரத்தான் துவங்கியது.

இந்த மாரத்தான் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாரத்தானை எல்.எம்.டபுள்யு, லக்சுமி மில்ஸ் மற்றும் லக்சுமி கார்ட் கிளாத்திங் ஆகிய நிறுவனங்களும் இணைத்து நடத்தின.
இந்த ஓட்டத்தினை கோவை போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையாளர் கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி ஆகியோர் இணைந்து கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை முன்னதாக துவக்கி வைத்தனர்.

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெற்றது. இதில் 18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறுகையில், கடந்த 2024 இல் இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 58 குழந்தைகள், இந்த மாரத்தானில் கிடைத்த நிதி மூலம் பயனடைந்தனர், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img