fbpx
Homeபிற செய்திகள்தேனியில் ஊராட்சி வருவாய் பெருக்க 2 நாள் பயிற்சி

தேனியில் ஊராட்சி வருவாய் பெருக்க 2 நாள் பயிற்சி

தேனி மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சிகளில் வருவாயை பெருக்குவதற்கு உண்டான இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக தமிழகம் முழுவதும் மற்றும் 6 மண்டலங்களில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

தேனியில் இந்த பயிற்சியில் அனந்தகுமார் ஐஏஎஸ் தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் சார்பாக சுகாதார அடையாள அட்டையினை முதல் கட்டமாக 16 நபர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் முன்னிலையில் உதவி திட்ட அலுவலர் குமரேசன் மற்றும் சேகர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பேயத்தேவன் மற்றும் திட, திரவகழிவு மேலாண்மை அலகு அலுவலர்கள் மற்றும் மாவட்ட வள மைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சுய வருவாய் பெருக்குவதற்கான குப்பைகள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு உண்டான வழிமுறைகள் எடுத்து கூறப்பட்டது .

படிக்க வேண்டும்

spot_img