எம்.ஜெ.எப் விருது தொடர்பான பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242சி மாவட்டத்தின் கேட், எல்சிஎப் மற்றும் மாவட்டத் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் ஆனைகட்டி டஸ்கர் ரிசார்ட் கருத்தரங்க கூடத்தில் மாவட்ட ஆளுநர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்டத்தின் வட்டார தலைவர் எழுத்தாளர் கனலி என்ற சுப்பு செந்தில்குமாருக்கு மெல்வின் ஜோன்ஸ் எம்.ஜெ.எப் என்ற விருதை முன்னாள் பன்னாட்டு இயக்குனர் மதனகோபால், முன் னாள் மாவட்ட ஆளுநரும் கூட்டு மாவட்ட பொருளாளரு மான நித்தியானந்தம், மாவட்ட ஆளுநர் ராஜசேகர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதலாம் துணை ஆளுநர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி. நந்தகோபால், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர், ராஜா சுந்தரம், பொருளாளர் நல்ல பாண்டி, மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் 50க்கும் மேற்பட்ட சங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



