பரங்கிப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் சத்திய நாராயணன், முன்னாள் ஒன்றிய தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் வரவேற்றார். பரங்கிப் பேட்டை ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் மனோகர், கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் மீதிக்குடி, நக்கரவந்தன்குடி, குமாரமங்கலம் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் செந்தில்குமார், சுப்புலட்சுமி, ஓட்டுனர் அணி இணை செயலா ளர் சுப்பு என்ற வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் இளவரசு, செல்வகுமாரி, இளைஞரணி நிர்வாகி சேரமன்னன், முன் னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



