கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
துணை குடியரசுத் தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் வரு கின்ற ஐந்தாம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். நான்காம் தேதி சென்னைக்கு வர உள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப் பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டி குறித்து தொழில் அமைப்பினரை சந்தித்து அது தொடர்பாக அவர்கள் கோரிக்கையை பெற்று பிரச்சினைகளை தெரிந்து கொண்டு மத்திய அரசாங்கத்திடம் இது பற்றி தெரிவிக்க உள்ளேன்.
வேத காலத்தில் இருந்து பெண்களுக்கென்று தனி சிறப்பான இடம் இந்தியா வில் உள்ளது. இந்திய சுதந்திரம் மறுமலர்ச்சி ஆகியவற்றில் வட இந்திய பெண்களும் பங்களித்துள்ளனர்.
வட இந்தியாவில் பெண்களின் கல்வி வேலை வாய்ப்பு ஆகியவை பின்தங்கி உள்ளது என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். நீண்ட காலம் ஆட்சியில் இருந்தது கல்வி ஆகியவற்றிற்கு அடித்தளம் இடுவதற்கு தவறியது காங்கிரஸ் கட்சிதான்.
கடந்த 11 வருடங்களாக முக்கியமான திட்டங்களான கழிப்பிட வசதி, அனைவருக்கும் வீடு அனைவருக்கும் வங்கிக் கணக்கு, தொழில் துவங்கு வதற்கு பெண்களுக்கான சிறப்பு திட்டம் என்று இந்திய பெண்கள் அடுத்த தளத்திற்கு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் பொழுதும் அரசியலுக்காக வடக்கு தெற்கு என்று அவ மானப்படுத்த வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கை.
முதலமைச்சர் துவக்கி வைக்கின்ற திட்டங்களுக்கும் மக்களிடம் அந்த திட்டம் சென்று சேர்வ தற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளது. மேடையில் கேமரா முன்பு திட்டங்களை அறிவிக்கும் பொழுது நன்றாக தான் உள்ளது. ஆனால் மேடைக்குப் பின்பு நடப்பது சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
கல்விக்காக திமுகவினர் விழா நடத்தியது டிராமா அரசாங்கத்தின் இன்னொரு நடவடிக்கை. துறைக்கு சம்பந்தமே இல்லாத சினிமாக்காரர்களை வைத்து விளம்பரத்திற்காக இந்த நாடகத்தை நடத்தி உள்ளனர். சினிமாக்காரர்களை குறைவாக நான் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



