மலேசியாவைச் சார்ந்த சாய்சைன் குழுமம் மற்றும் சாய்சைன் யோகா மற்றும் ஆயுர்வேதா நிறுவனத்தின் சார்பாக உலக அளவிலான முதல் யோகா கருத்தரங்கம் மற்றும் யோகாசனப் போட்டி கள் மலேசியாவின் கோலாலம் பூரில் நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் “வாகை சூடிகளின் வாகை சூடி” (Champion of Champions) என்ற பிரிவில் இயங்கலை யில் (Online) நடைபெற்ற யோகாசனப் போட்டியில் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி டி.எஸ்.தன்யா முதலிடம் பெற்று சாதனை புரிந்தார்.
சாதனை புரிந்த மாணவியை பள்ளியின் தாளாளர் டாக்டர் கே.செங்கோட்டுவேலன், மற்றும் பள்ளியின் முதல்வர் கே.மைதிலி பாராட்டினர்.



