fbpx
Homeபிற செய்திகள்ஜெ.இ.இ. கல்வி தேர்வுக்கான ஆலோசனை மையம் திறப்பு

ஜெ.இ.இ. கல்வி தேர்வுக்கான ஆலோசனை மையம் திறப்பு

கோவையில் நீட் மற்றும் ஜெ.இ.இ. கல்வி தேர்வுக்கான ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது.


கல்வி ஆலோசனை நிறுவனமான ஃபிசிக்ஸ் வாலா (பிடபிள்யூ) வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் மாணவர்களுக்கு ஜெஇஇ மற்றும் நீட் போன்ற தேர்வுக்கு ஆலோசனை வழங்கும் மையம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் அதே இடத்தில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படிப்பகத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.


இது வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். மாணவர்கள் இங்கு ஜெஇஇ மற்றும் நீட் போன்ற தேர்வுகளுக்கான ஆலோசனைகளைப் பெறலாம்.


மேற்கண்ட தகவலை இந்த மையத்தின் தென்னிந்தியா தலைமை நிர்வாகி அமித் சிங் ராதோரே,மற்றும் சஞ்சய் குமார் சர்மா சிவராமகிருஷ்ணன் அங்கித் குப்தாஆகியோர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img