fbpx
Homeபிற செய்திகள்நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் விருது

நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் விருது

தூத்துக்குடி பண்டாரம் பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணிசெய்துவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

சென்னை வேல்ஸ் பல்கலைகழகம் மூலம் தமிழ்றாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா வேல்ஸ் பல்கலைகழக சிவாலயா அரங்கில் நடைபெற்றது.

அதில் மிகச் சிறந்த 6 ஆசிரியர்களில் தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் பணி செய்துவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஆவார்.

அவருக்கு வேல்ஸ் பல்கலைகழகம் மூலம் சிறந்த ஆசிரியருக்கான விருது, சான்றிதழ் மற்றும் ரூ.30,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டேப் வழங்கப்பட்டது.

விழாவில் வேல்ஸ் பல்கலைகழக நிறுவனர் டாக்டர் ஐசரி கணேசன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற தலைமையாசிரியரை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img