கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் வந்து தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மலையாள மக்களின் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர்.மேலும் கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப் பூ கோலம் போடப்பட்டுள்ளது அதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்திப்பூ கோலமிட்டும் சாமி தரிச னம் செய்து பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுல குக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண் டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்திப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
ஓணம் பண்டிகை கேர ளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதேபோல ஓணம் பண்டிகை ஒட்டி ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு இன்று முதல் நாளாக சோறு ஊட்டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.



