fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் கண்காட்சி நடத்த ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் கண்காட்சி நடத்த ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நடத்துவது தொடர்பாக சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இராணிப் பேட்டை மாவட்டத்தில் முதன் முதலாக தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அண்டை மாநிலத்திலுள்ள தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். நிறுவனங்களுக்கிடையே தொழில், வியாபாரம் குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்படும். 120க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் அக்டோபர் 2025 கடைசி வாரத்தில், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள இடத்தில் நடத்திட உத்தேசிக்கப் பட்டுள்ளது. ஆகவே இக்கூட் டத்திற்கு வருகை புரிந்துள்ள தொழில் நிறுவ னங்கள் மற்றும் சங்கங்கள் இக்கண் காட்சியை சிறப்பாக நடத்திட ஆலோச னைகள் வழங்க வேண்டும். மேலும், கண்காட்சியில் கலந்து கொள்ள முன்பதிவுகளையும் தொடங்கிட வேண்டுமென கலெக் டர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இக்கூட்டத்தில் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ள இடம், தேதி மற்றும் தேவையான ஏற்பாடுகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ஆனந்தன், ராணிப்பேட்டை மாவட்ட சிறு குறு தொழில்கள் சங்க தலைவர் புனிதவேல், பொதுச் செயலாளர் முரளி, தொழிலக பாதுகாப்பு மற்றும் நலத்துறை துணை இயக்குநர்கள், தீயணைப்புத் துறை அலுவலர், சிறு குறு தொழில் சங்க நிர்வாகிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img