கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் ஜே.டி (JD) கல்வி மற்றும் பயிற்சி நிறுவன 6வது ஆண்டு விழாவும் அதன் பி.வோக் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. தொடக்கத்தில் பாரம்பரிய வரவேற்பு நடனம் அனைவரையும் கவர்வதாக அமைந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஜே.டி கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சம்ஜித் தனராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.பொன்னுசாமி முன் னிலை வகித்தார். இந்துஸ்தான் அறக்கட்டளை நிர்வாக அறங்கா வலர் டாக்டர் கே.பிரியா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் களுக்கு இந்துஸ்தான் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.ஆர்.கே. சரசுவதி பொன்னாடை அணி வித்து நினைவு பரிசுகள் வழங்கி, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ட்ரொட்ஸ்கி மருது உரை இடம்பெற்றது. அவரது ஊக் கமளிக்கும் உரை மாணவர்களை ஆழமாக சிந்திக்க வைத்ததோடு படைப்பாற்றல், மீள்தன்மை மற்றும் உறுதியுடன் தங்கள் எதிர்கால பயணத்தை தொடங்க வழிகாட்டுவதாக அமைந்திருந்தது.
பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, சிறப்பு விருந் தினர்களிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற்ற 2021 மற்றும் 2022ம் ஆண்டுத் தொகுதி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தொழில் துறைக்காக மாணவர்களைத் தயார்நிலைப்படுத்தும் வகையில் ஜே.டி. கல்வி நிறுவனத்தின் வி.எஃப்.எக்ஸ் தலைவர் நாகேந்திரன், எதிர்காலத்தில் தொழில்துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தனித்துவம், தயார் நிலைக்கான அறிக்கையை வழங் கிப் பேசினார்.
பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கு விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. கிராஃபிக் டிசைன் விருது என்.கௌதமனுக்கும் யூஐ வடிவடிமைப்பு விருது ஜே.கெவினுக்கும் மல்டி மீடியா விருது என்.கௌதமனுக்கும் 3டி விருது எஸ்.பிரணவ்க்கும் சிறந்த மாணவர் விருது என்.கௌதமனுக்கும் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு விருதும் கலாச்சாரம் மற்றும் கலை உணர்வை வெளிப்படுத்தும் மாணவர்களின் துடிப்பான நடன நிகழ்ச்சிகளுடன் இடையிடையே வழங்கப்பட்டது.
இந்த விழா, ஊடகம், வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் திறமைகளை வளர்ப்ப தற்கான அர்ப்பணிப்பை ஜே.டி கல்வி நிறுவனம் உறுதிப்படுத் துவதாக அமைந்தது. கலாச்சாரம், பாரம்பரியம், ஞானம், அறிவு மற்றும் புதிய தொடக்கங்களுக்கு இந்த விழா வழிகாட்டியது. இது ஜே.டி. நிறுவனத்தின் ஒரு மைல் கல் சாதனை என்றால் மிகையாகாது.



