கோயம்புத்தூர் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பத் துறை இணைந்து, “தொழில் துறைகள் வேட்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் திறன்கள் மற்றும் அவற்றை பூர்த்தி செய்யும் முறைகள் பற்றிய” ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தியது.
இதில் 150க்கும் மேற்பட்ட இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் உயிரி தகவலியல் மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவமை யம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.
இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கிடையே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் தொழில் நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கு வழி வகுக்கும்.
மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், சுய கற்றல், தகவல் தொடர்பு திறன்களில் தேர்ச்சி பெறுதல், பாட அறிவை மேம்படுத்துதல் மற்றும் தொடர்ந்து பயிற்சி செய் வதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக உயிரி தொழில்நுட்ப மகத்துவமை யம் மற்றும் தாவர மூலக் கூறு மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மைய இயக்குனர் முனைவர். ந.செந்தில் வரவேற்புரை யாற்றினார். இறுதியாக, தாவர மூலக்கூறு மற்றும் உயிரி தகவலியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். லோ. அருள் நன்றி உரையாற்றினார். தாவர உயரி தொழில்நுட்பவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர்.கே. ஹேமபிரபா மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர்.வே. ராஜன்பாபு ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.



