fbpx
Homeபிற செய்திகள்இன்னர் வீல் கிளப் சார்பில் ஏழை நோயாளிகள் பயன்படுத்த இலவச டயாலிஸிஸ் கருவி

இன்னர் வீல் கிளப் சார்பில் ஏழை நோயாளிகள் பயன்படுத்த இலவச டயாலிஸிஸ் கருவி

இன்னர் வீல் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சங்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோவை பீளமேடு ஜிஆர்டி கல்லூரி கலையரங்கத்தில் தங்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை விருந்தினராக சர்வ தேச இன்னர் வீல் சங்கத் தலைவர் கேய் மோர் லேன்ட், கௌரவ விருந்தி னராக சங்கத் தலைவர் ஜோதி மஹிபால், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் (இன்னர் வீல் 320) சீமா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

கோல்டன் ஜூபிலி விழாவில் இன்னர் வீல் சங்க தேசிய தலைவர் ஜோதி மரிபால் பேசியதா வது: எங்கள் கோவை அமைப்பில் 106 உறுப்பி னர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.
நாங்கள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் சேவைகளைச் செய்து வருகிறோம். கடந்த 5 வருடங்களாக பெரிய அளவிலான திட்டங்களை செய்து வருகின்றோம்.
கடந்த ஆண்டு கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கார்ப்பரேஷன் நூலகத்திற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐஏஎஸ் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங் களை வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற பொன் விழாவை முன்னிட்டு மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமூக சேவைத் திட்டங்கள் அறி விக்கப்பட்டன.
கோவை அபிராமி மருத்துவமனையில் ஏழை நோயாளிகளுக்காக இலவச டயாலிஸிஸ் கருவி வழங்கப்பட்டது.
கவுண்டம்பாளையம் ரெட் கிராஸ் பள்ளியில் பெண்கள் தொழில் முனைவு பயிற்சிக்காக தையல் பிரிவு தொடங்கப் பட்டது.
சங்கத் தலைவர் ராதிகா தலை மையிலான 105 உறுப்பினர்கள் கொண்ட குழு தொடர்ந்து பல் வேறு சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img