கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிரச்சார விழாவாக அமைய கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக முன்னேற்றத் திற்காகவும், கழகப் பணியிலும் முழுமை யாக அர்ப்பணிப்புடன் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றும் கழக தொண்டர்களை, நிர்வாகி களைக் கௌரவிக்கும் வண்ணம் ஆண்டு தோறும் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பெயரில் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் முப்பெரும் விழா நடத்த கட்சி தலைமை அனுமதி அளித்துள்ளது. முப்பெரும் விழாவை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது தொடர்பான மாவட்ட செயற்குழு கூட்டம் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் நேற்று மாலை மாவட்ட அமைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முப்பெரும் விழா நடத்த அனுமதி அளித்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்தும், முப்பெரும் விழாவில் அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது எனவும், கலைஞர் கருணாநிதி மறைவிற்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக திமுக தலைமை ஏற்று வழி நடத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவிப்பதாக தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ,நடைபெற உள்ள முப்பெரும் விழாவை வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார விழாவாக மாற்றும் வகையில் நாம் செயல்பட வேண்டும். அதற்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.



