Homeபிற செய்திகள்கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை)- பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு – “தமிழ் செயற்கை நுண்ணறிவு – 2025” எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடை பெற்றது.

தமிழ்த்துறையுடன் தகவல் தொழில்நுட்பத் துறையும், தமிழ் அநிதம் (அமெரிக்கா), ஓயிஸ்கா சர்வதேச நிறுவனம்( தமிழ்நாடு), உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா), பஹ்ரைன் பாரதி தமிழ்ச்சங்கம், நாகூர் தமிழ்ச்சங்கம் ஆகிய குழுமங்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் கருத்தரங்க ஆய்வை கோவையைச் சென்னைப் பல்கலைக்கழகத், தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு) மொழியியல் ஆய்வுப்பிரிவின் பேராசிரியர் ந.தெய் வசுந்தரம் வெளியிட, தமிழ் அநிதம் நிறுவனர் (அமெரிக்கா) சுகந்தி நாடார் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், Business Operations Accenture UKIA வின் துணைத் தலைவர் பிரசன்னா ராவ், உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவர் எம்ஜிகே. நிஜாமு தீன், தமிழ் அநிதம் செயலர் பேராசிரியர் பா.தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளின் சாரத்தை அரங்கில் முன் வைத்தனர். இணைய வழியிலும் கட்டுரைகள் வாசித்தனர்.
பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வில் தமிழ்த்துறை & தகவல் தொழில்நுட்பத் துறைப் (சுயநி திப்பிரிவு) பேராசிரியர்க ளுடன், 255 மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img