fbpx
Homeபிற செய்திகள்விஜயகாந்த் பிறந்தநாள் விழா - திருப்பூரில் அன்னதானம்

விஜயகாந்த் பிறந்தநாள் விழா – திருப்பூரில் அன்னதானம்

தேமுதிக நிறுவனரும் தமிழக முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் தேமுதிக சார்பாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.


நிகழ்விற்கு மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி.ஆர். குழந்தைவேல் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராயபுரம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காளியப்பன், துணைச் செயலாளர்கள் வசந்த் யுவராஜ், சசிகலா கணேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராஜ்,கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, கருப்புசாமி, ஷேக் முகமது, வரதராஜ், பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த், சண்முகராஜா, சரவணன், விகாஷினி தேவேந்திரன், பெஸ்ட் ராமு, மணி, கண்ணன், ஒன்றிய கழகச் செயலாளர் என்.எஸ். என்.சண்முகம், வி.பி.வேலுச்சாமி, ரவிச்சந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் சுமதி, மல்லிகா, ராஜேஸ்வரி, புனிதா, ஜீனத் பேகம், இளைஞர் அணி நிர்வாகிகள் கணேஷ், சத்தியராஜ், காணவயல் கணேசன், கோபாலகிருஷ்ணன், ஐடி விங் உதயமூர்த்தி, தினேஷ், மாவட்ட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சாஸ்தா செந்தில், பவுன்ராஜ், வட்ட கழக செயலாளர்கள் கிட்டுசாமி, கண்ணன், பிரபு, சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img