Homeபிற செய்திகள்முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தி ஜிகே உலகப்பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூடைப்பந்து மற்றும் நீச்சல் போட்டியினை தொடங்கி வைத்தார்.


இந்த விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை நடத்திட132 உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணிபு ரிய உள்ளனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச் சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 85,052 நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், தி ஜிகே உலகப்பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் வினோத் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img