வொர்க் ஈஸி ஸ்பேஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கோவையில், 1,00,000 சதுர அடியில் பேஸ்-1 திட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளதை அறிவிக்கிறது. இது சரவணம்பட்டியில் அமைந்துள்ளது. இத்திட்டம், நவம் பர் 2025க்குள் செயல் பாட் டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
கோயமுத்தூரில் இருந்து இயங்கும் அலுவலகங்களுக்கான இடத்தை உருவாக்கி தரும் சந்தையில், முன் குத்தகையில், எங்களு டன் கையொப்ப மிடப்பட்ட தில், இதுவும் ஒன்றாகும். மேலும், கோயமுத்தூரில் 3 லட்சம் சதுர அடியில், இந்நிறுவனத்திற்கான திட்டங்கள் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வொர்க் ஈஸி ஸ்பேஸ் சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் சுனில்ரெட்டி கூ
றுகையில்,”வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நகரங்களில், 2026 ம் ஆண்டின் இறுதிக்குள், 2 மில்லியன் சதுர அடி போர்ட்போலியோ உருவாக்கும் மைக்கல் இலக்குடன், நாங்கள் பயணித்து வருகிறோம்,’’ என்றார்.
தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி பிரதாப் முரளி பேசுகை யில்,‘‘தற்போது கையொப்ப மிடப்பட்டுள்ள பேஸ்-1 திட்டத்துடன், கூடுதலாக 2 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், கோய முத்தூரில் எங்கள் நிறுவ னத்தின் முக்கிய வளர்ச்சி மற்றும் செயல் பாட்டு மையமாக மாற்றுவதே, எங்கள் எதிர்கால திட்டமாக உள்ளது,’’ என்றார்.
ஏ.வி.பி., ரியல் எஸ்டேட் நிர்வாகி சதீஷ், இத்திட்டத்தின் மூலம், கோயமுத்தூரின் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றார்.
இந்த விரிவாக்கங்கள் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், கோயமுத்தூரில் இருந்து மட்டும் 250 கோடிக்கும் அதிகமான வருவாயை, வொர்க் ஈஸி ஸ்பேஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது.



