fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தமிழகத்தில் முதன் முறையாக ‘பிக்கிள் பால் உலக தரவரிசை’ போட்டிகள்

கோவையில் தமிழகத்தில் முதன் முறையாக ‘பிக்கிள் பால் உலக தரவரிசை’ போட்டிகள்

கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ் நடத்தும் தமிழகத்தின் முதல் ‘பிக்கிள் பால் உலக தரவரிசை’ போட்டிகள் கோவையில் நடைபெற்றது.

கோவையின் முதல் பிக்கிள் பால் அணியான ‘கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ்’ சார்பில் கடந்த 23, 24 தேதியில் கோயம்புத்தூர் பிக்கிள் பால் ஓபன் போட்டி முதன்முதலாக திருச்சி சாலையில் உள்ள பிக்கிள் பால் கிளப் ஹவுஸில் நடைபெற்றது.
இது தமிழகத்தின் முதல் ‘பிக்கிள் பால் உலகத் தரவரிசை (பி.டபிள்யு.ஆர்.) 200’ வகை போட்டியாகும். பி.டபிள்யு.ஆர்-50 வகை போட்டிகள் என்பது கிளப் அளவிலான போட்டிகளையும், பி.டபிள்யு.ஆர்-100 வகை போட்டிகள் நுழைவு நிலை போட்டிகளையும் குறிக்கும்.

அதே வேளையில், பி.டபிள்யு.ஆர்-200 ரக போட்டிகள் என்பது பிராந்திய அளவில் நடைபெறும் போட்டிகளைக் குறிக்கிறது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இப்போட்டிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, திறன் மற்றும் வயது அடிப்படையிலான பிரிவுகளில் நடைபெற்றது.

இதில் சென்னை வீரர்கள் சரவணன், வெங்கடேஷ், ஜெய்ஷ்னு, அனீஷ் மற்றும் விஸ்வஜித், பெங்களூர் வீரர்கள் கௌதம், ரஞ்சித், ஸ்பேடன் மற்றும் ஆதித்யா பிரதீப் ஆகியோருடன், கொல்கத்தாவைச் சேர்ந்த வினய் சேத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முக்கிய வீரர்களுடன் கோயம்புத்தூரைச் சேர்ந்த பூபதி மற்றும் ரித்திகா ஆகியோரும் இணைந்து களம் காணவுள்ளனர்.
இந்தியாவில் பிக்கிள் பால் போட்டி மிக வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img