fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் கட்டுமான உபகரணக் கண்காட்சி: தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்

சென்னையில் கட்டுமான உபகரணக் கண்காட்சி: தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோ பாதைகள், லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் மற்றும் தொழிற்பூங்காக்கள் வேகமாக வளர்ந்து வரும் இந்த சூழலில், கனெக்ஸ் சவுத் 2025 தென்னிந்திய கட்டுமானத் துறைக்கான நேர்முக மற்றும் செயல் முறை நோக்கமுடைய சந்தையாக நடைபெறுகிறது.

இக்கண்காட்சியின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 28 முதல் 30 வரை சென்னை வர்த்தக மையம் (அரங்குகள் 2, 3, 4) 10,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் நடைபெறுகிறது.

இதில் ஜேசிபி இந்தியா, டாடா ஹிட்டாச்சி, எச்டி ஹுண் டாய், புல் மெஷின்ஸ், ப்ரொபேல் இண்டஸ்ட்ரீஸ், புஸோலானா, அம்மான் உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் கட்டுமான இயந்திரங்கள், சுரங்க உபகரணங்கள், கான்கிரீட் உற்பத்தி சாதனங்கள் மற்றும் கட்டுமான வாகனங்களை காட்சிப்படுத்துகின்றன.

மெஸ்ஸே முன்சென் இந்தியா, தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு (TNHCF) மற்றும் மாநில வழிகாட்டுதல் துறை இணைந்து ஏற்பாடு செய்யும் இக்கண்காட்சி, தென்னிந்திய வேலை தள நிதர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறுகிய மதிப்பீட்டு சுழற்சிகள், பக்கவாட்டு ஒப்பீடுகள் மற்றும் உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப செயல்விளக்கங்கள் இதில் இடம்பெறுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 28 மாலை 5 மணிக்கு கண்காட்சியைத் துவக்குகிறார்.
பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான உபகரண உரிமையாளர்கள் சங்க தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

பார்வையாளர்கள் 110+ பிராண்டுகள் கொண்ட விரிவான காட்சியை எதிர்பார்க்கலாம். மண் அசைவூக்க மற்றும்சாலை உபகரணங்கள், கனரக போக்குவரத்து, தூக்குதல், சுரங்கம் மற்றும் ஸ்மார்ட் கட்டுமான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகள் இதில் இடம்பெறும். அதேசமயம், 36க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் வரவிருப்பதோடு, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்குபவர் – விற்பனையாளர் சந்திப்புகளும் நடத்தப்படுகின்றன.

இந்தியன் ஆயில் கார்போரேஷன் (IOCL) உடன் இணைந்து “பிற்று மின் மற்றும் சாலை பொறியியல்: ஆலை ஆற்றலிலிருந்து சாலைத்தட செயல்திறன் வரை” என்ற தலைப்பில் தொழில்நுட்ப மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான திட்டங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை, செலவுக் கட்டுப்பாடு, பாதுகாப்பு இணக்கம் போன்ற சவால்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பதிலளிக்க, கண்காட்சியாளர்கள் இயந்திரமயமாக்கல், எரி பொருள் திறன், டிஜிட்டல் தீர்வுகள், பேட்சிங் மற்றும் பேவிங் மேம்பாடுகள் போன்றவற்றை முன்னிறுத்துகின்றனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். திருசங்கு, “இது உற்பத்தியாளர்கள், சேவை குழுக்கள் மற்றும் வாங்குபவர்களை ஒன்றி ணைத்து, சோதனை மற்றும் பிழைகளை குறைக்கிறது,” என்றார்.

பூபிந்தர் சிங், மெஸ்ஸி முன்சென் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி, “எங்கள் நோக்கம் வணிக வாய்ப்புகளைத் திறக்க அர்த்தமுள்ள கூட்டணி களை உருவாக்குவதாகும். கனெக்ஸ் சவுத், தென்னிந்தியாவின் வளர்ச்சி இயக்கிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால், உரையாடல்களை நேரடி யாக ஒப்பந்தங்களாக மாற்றுகிறது,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img