fbpx
Homeபிற செய்திகள்கரூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 84 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள் செந்தில்பாலாஜி தொடங்கி...

கரூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 84 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணி களை திறந்தும் வைத்தார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு பணிகளாக நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
அந்த வகையில் கரூர் மாநகராட்சி வார்டு எண் 1, 2, 4, 5, 6, 7, 8, 21, 22, 23, 24, 25, 26, 29, 30, 31, 32, 33 மற்றும் 34க்குட்பட்ட பகுதிகளில் உயர் மின் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், ஆழ்குழாய் கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் பணிகள், சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலை இணைப்பில் மராமத்து பணிகள், சிமெண்ட் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் தார் சாலை மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததோடு 9 முடிவுற்ற பணிகளும் திறக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் ப.சரவணன், மண்டல குழுத் தலைவர் கள் ஆர்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ், சக்திவேல், அன்பரசு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img