fbpx
Homeபிற செய்திகள்உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சி, புளியந்தாங்கல், மேல்விஷாரம் நகராட்சி, ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், புதுப்பாடி ஊராட்சி கலவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு, மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்திர கலா தலைமை தாங்கினார். ஆற்காடு எம். எல்.ஏ.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார்.

மேற்படி முகாம்களில் 3 பயனாளிகளுக்கு பட்டா பெயர்மாற்ற ஆணைகள், வருவாய்த்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு சான்றுகள், மாவட்ட வழங்கல் துறையின் சார் பில் 2 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள், சுகாதாரத் துறையின் சார்பில் 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், மின்சாரத் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு பெயர் மாற்ற ஆணைகள், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து காய்கறி விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மேல்விஷா ரம் நகரமன்ற தலைவர் குல்ஜார் அஹமது, துணைத் தலைவர் ஜாபர் அஹமது, வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஞானசுந்தரம், வட்டாட்சி யர்கள் ஆனந்தன், மகாலட்சுமி, சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, வெங்கட், நகராட்சி ஆணையாளர் பழனி, செயல் அலுவலர் ஜெயக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனோகரன், சேகரன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img