fbpx
Homeபிற செய்திகள்கரூரில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.800 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள்: செந்தில் பாலாஜி தகவல்

கரூரில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.800 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள்: செந்தில் பாலாஜி தகவல்

கரூர் மாநகராட்சியில் “லைட்ஹவுஸ் ஸ்கீம்” திட்டத்தின் மூலம் ரூ.800 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் ரூ.8.08 கோடி மதிப்பீட்டில் 97 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 6 முடிவுற்ற பணி களை திறந்தும் வைத்தார்.
இது குறித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு பணிகளாக நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரப் படுகின்றன.

அந்த வகையில் கரூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யக்கூடிய கட்டளை தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து புதிதாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப் பட்டுள்ளன. குறிப்பாக மண்டலம் 3 மற்றும் 4 ற்குட்பட்ட பகுதிகளுக்கு புதிய கிணறு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி கள் மேம்படுத்தப்பட்டு, இந்த தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன.
ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் மூலமாக மண்டலம் 3, 4 ஆகிய மண்டலங் களுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட 11 MLD குடிநீர் அளவிலிருந்து உயர்த்தி, 15 MLD குடிநீர் வழங்கக்கூடிய அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியில் “லைட்ஹவுஸ் ஸ்கீம்” என்ற திட்டத்தின் மூலம் ரூ.800 கோடி மதிப்பீட்டில் விடு பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைத்தல், புதிய குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டடுள்ளன.

கரூர் மாநகராட்சியில் ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளில் ரூ.328 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலைகள், கால்வாய்கள், தெருவிளக்குகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் நிறைவுற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ் வாறு தொடர்ச்சியாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நிதிகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

அந்த வகையில் இன்றைய தினம், கரூர் மாநகராட்சி, வார்டு எண் 35, 20, 12, 17, 19, 38, 42, 37, 36, 46, 43, 44, 47, 48, 41, 39, 40, 16, 15, 18. 13 14 க்குட் பட்ட பகுதிகளில் புதிதாக சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால், தார்சாலை மேம்படுத்தும் பணிகள் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் மற்றும் மண்டலம் 3க்குட்பட்ட கட்டளை தாந்தோணி, கட்டளை சணப்பிரட்டி, தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மூலக்காட்டானூர் நீருந்து நிலையத்தில் வட்டக்கிணறு தூர்வாருதல், டிஜிட்டல் அளவு மானி மின் தேக்கி, நீர்மூழ்கி பம்பு செட் உபகரணங்கள் விநியோகம் மற்றும் சோதனை செய்து இயக்குதல் பணிகள் துவங்கப்பட்டது.

கட்டளை சணப்பிரட்டி நீருந்து நிலையத்தில் புதிய நீர்மூழ்கி மோட்டார், மின் உபகரணங்கள் மற்றும் வட்ட கிணறு அமைக்கும் பணிகளையும், மண்டலம் 4 க்குட்பட்ட KFW தலைமை நீரேற்று நிலையம், பொன்நகர் நீருந்து நிலையத்தில் டிஜிட்டல் அளவு மானி, தானியங்கி மின்தேக்கி, டிரான்ஸ்பார்மர். ஜெனரேட்டர் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம் மற்றும் சோதனை செய்து இயக்குதல் பணிகளையும், KFW தலைமை நீரேற்று நிலையத்தில் 165 எச்.பி மின் மோட்டார் பம்பு செட் 300 மீ இடைமட்ட ஆழ்துளை கிணறு சுத்தம் செய்யும் பணிகளையும், KFW தலைமை நீரேற்று நிலையத்தில் 50 எச்.பி நீர் மூழ்கி பம்பு செட் மற்றும் இதர மின் உபகரணங்கள் விநியோகம் மற்றும் சோதனை செய்து இயக்கும் பணிகளையும் என மொத்தம் ரூ.8.08 கோடி மதிப்பீட்டில் 103 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், துணை மேயர் ப. சரவணன், மாநகராட்சி செயற்பொறியாளர் சி.சுந்தர் ராஜ், மண்டல குழுத் தலைவர்கள் ஆர்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img