இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் புலவர்களுக்கு இணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் விருதுகள் வழங்கினார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தரின் பிறந்தநாள் விழா வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி கோவையில் உள்ள ஆழம் ஹெர்பல் பார்மில் தமிழ் புலவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், சமூக தொண்டுள்ளம் உள்ளவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு சுமார் பத்து லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் விருதுகள் மற்றும் உதவிகளை வழங்கினார். தொடர்ந்தவர் பொதுமக்களுக்கும் பல்வேறு நல திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்திய ஜனநாயக கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் செய்தனர்.



