fbpx
Homeபிற செய்திகள்கனரா வங்கியின் கோவை பிராந்திய அலுவலகம்-2 சார்பில் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் 294...

கனரா வங்கியின் கோவை பிராந்திய அலுவலகம்-2 சார்பில் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் 294 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் தகுதியுள்ள எஸ்சி- எஸ்டி மாணவிகளுக்கான கனரா வித்யா ஜோதி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கனரா வங்கி செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கனரா வங்கியின் கோவை பிராந்திய அலுவலகம்-2 சார்பில் அதன் 49 கிளைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பயிலும் சிறந்த எஸ்சி/எஸ்டி மாணவிகளுக்கு நடப்பாண்டு கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கனரா வங்கியின் கோவை பிராந்தியம் 2 அலுவலகத்தின் சார்பில் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் 5 முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தலா ரூ.3000 வீதமும் 8ம் வகுப்பு முதல் – 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தலா ரூ.5000 வீதமும் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத் தின் மூலம் மொத்தம் 294 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயனடைந்தனர்.

அவர்கள் வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு வர வழைக்கப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல மேலாளர் ஹரிஹரன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தாட்கோ கோவை மாவட்ட மேலாளரும் உதவி ஆட்சியருமான மகேஸ்வரி வழங்கினார்.

நிகழ்வில் வங்கியின் கோட்ட மேலாளர் முரளி மோகன், முதுநிலை மேலா ளர் சக்திவேல், அலுவலர் சுருதி கனிமொழி, சர வணம்பட்டி கிளை முதுநிலை மேலாளர் பூர்ணிமா தர்ஷினி, கவுண் டம்பாளையம் முதுநிலை மேலாளர் கணேஷ், வட வள்ளி கிளை அலுவலர் ரூபி மேரி உள்ளிட்ட வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img