fbpx
Homeபிற செய்திகள்சிஎஸ்ஐ ஈரோடு - சேலம் திருமண்டலத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டம் புதிய பேராயர் அறிவிப்பு

சிஎஸ்ஐ ஈரோடு – சேலம் திருமண்டலத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டம் புதிய பேராயர் அறிவிப்பு

ஈரோடு சேலம் புதிய திருமண்டலம் சார்பில் சேலம் மாவட்டம் பெத்தேல் என்ற பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று புதிதாக திருமண்டலத்தில் பேராயராக பொறுப் பேற்றுள்ள டாக்டர் ஏ.ஜேக்கப் லிவிங்ஸ்டன் கூறினார்.

ஈரோடு சிஎஸ்ஐ வளாகத்தில் அவருக்கு அளித்த வரவேற்பின்போது அவர் பேசியதாவது: சிஎஸ்ஐ நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டபோது ஐந்து திருமண்டலங்கள் இருந்தன.
கடந்த 80 ஆண்டு களில் அது 25 ஆக அமைந்துள்ளது. பெரிய திருமண்டலங்கள் இருந்த தால் நிர்வகிப்பது கடினம் என்பதால் கடந்த பல்லா ண்டுகளாக 100 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஒரு திருமங்கலம் ஏற் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. அதன் அடிப் படையில் தற்போது ஈரோடு சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளடக்கிய திருமண்டலம் உருவாக்கியுள்ளது. சிறிய அளவிலான திருமண் டலங்கள் இருக்கும் போது தான் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
கோவை திருமண்ட லத்துடன் இப்பகுதி இருந்தபோது கோவை பகுதியில் கல்வி நிறுவனங்கள் மருத்துவ மனை வளர்ச்சி இருந்தது. ஈரோட்டில் வளர்ச்சி இல்லை. எனவே தற்போது ஈரோடு சேலம் திருமண்டலத்தில் ஈரோடு, சென்னிமலை, மாரண்டஹள்ளியில் உள்ள மூன்று மருத்துவமனைகள்- மேம்படுத்தப்படும்.

பெத்தேல் பகுதியில் 110 ஏக்கர் நிலம் விவசாய சங்கத்துக்கு பயன்படுத்தப் பட்டது. அதன் நிறுவனர் இறந்துவிட்டார். அந்த நிலத்தை யாருக்கும் விற்க முடியாது. ஆனால் சிஎஸ்ஐ போன்ற அறக்கட்டளை மூலமாக நிலத்தை வாங்கி அங்கு மருத்துவ கல்லூரி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் கலைக் கல்லூரி, பிஷப் தங்கமுத்து இருபாலர் கல்லூரி ஆக மாற்றப்படும். ஈரோடு ஆசிரியர் பயிற்சி பள்ளி பி எட் கல்லூரி ஆக தரம் உயர்த்தப்படும். பேராயர் பாப்லி தனது புத்தகத்தில் ஈரோடு பகுதியில் 106 ஆரம்பப் பள்ளிகளில் இருந்தன என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது 27 பள்ளிகள் மட்டுமே உள்ளன.
பல பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாணவர்கள் சேர்க்கையில்லை. மீண் டும் பள்ளிகளை புனர மைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்க். எட்டு விடுதிகள் உள்ளன. அவைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லிமலை, தேன்கனிக் கோட்டை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை போன்ற பகுதிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பிற திருமண்டலங்களைச் சேர்ந்த போதகக்கூடங்கள் உள்ளன. அவைகளை கேட்டு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நமது இளைஞர்கள் ஆயர் பணியில் ஈடுபட அவர்களுக்கு மதகல்வியை வழங்க ஊக்கமளிக்கப்படும். சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி தரம் உயர்த்தப்படும். இந்த புதிய திருமண்டலத்தில் 1.75 லட்சம் கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. அவர்கள் முன்னேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் கல்லூரி ஆக தரம் உயர்த்தப்படும். போதகர்களுக்கு இனி சம்பளம் திருமண்டலம் சார்பிலேயே வழங்கப்படும். திருமண்டலத்திற்கு தனி அலுவலகம் பேராயர் குடியிருப்பு போன்றவைகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். இவ் வாறு பேராயர் டாக்டர் ஏ.ஜேக்கப் லிவிங்ஸ்டன் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img