fbpx
Homeபிற செய்திகள்கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் இமேஜிங் சங்க தேசிய கருத்தரங்கு

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் இமேஜிங் சங்க தேசிய கருத்தரங்கு

கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் இமேஜிங் சங்கத்தின் தேசிய கருத்தரங்கு, கோவையில் உள்ள மெர்லிஸ் ஹோட்டலில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெற்றது.

இந்த புற்றுநோய் இமேஜிங் சங்கத்துக்கு டாக்டர் பாக்யம் தலைவராகவும், பங்கஜ் சர்மா பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இந்தியாவில் மார்பகம், கருப்பை வாய் மற்றும் வாய் சார்ந்த புற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்க இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மூன்று நாள் நடைபெற்ற கருத்தரங்கில் முதல் நாள் சிக்கலான புற்றுநோய் ஸ்கேன்களைக் கையாள்வது குறித்த பயிற்சி தொடங்கியது. ஹார்வர்ட் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் சர்வதேச வல் லுநர்கள் இதனை வழி நடத்தினர்.

ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் கதிரியக்க நிபுணர்களுக்கான தொடர் விரிவுரைகள் நடைபெற்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஏழு சர்வதேச வல்லுநர்களும், இந்தியாவின் சிறந்த கதிரியக்க நிபுணர்கள் 50 பேரும் கலந்து கொண்டார்கள்.

இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த அறிக்கைகளை தரப்படுத்தல் குறித்து டாக்டர் அன்பரசு சிறப்பு விளக்கவுரை நிகழ்த்தினார். பல போட்டி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, சிறந்தவற்றுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த கதிரியக்க சேவைத் துறை தலைவரும் கருத்தரங்கு ஏற்பாட்டுத் தலைவருமான டாக்டர் மேத்யூ செரியன் மற்றும் அடி வயிறு இமேஜிங், அபலேஷன் சிகிச்சை முதன்மை ஆலோசகரும் கருத்தரங்கு அமைப்புக் குழுவின் செயலாளருமான டாக்டர் வெங்கடேஷ் மற்றும் குழுவி னரைப் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img