யூத் ஹாஸ்டல் சங்கம் சார்பில் தமிழ்நாடு கொங்கு பிரிவு சார்பில் பர்கூர் மலை அரசு பழங்குடியினர் குடியிருப்பு தொடக்கப்பள்ளியில் பழங்குடியினர் நல முகாமை சுதந்திர தினத்தன்று நடைபெற்றது.
வனத்துறை ரேஞ்சர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். பிரிவுத் தலைவர் மகேந்திரன் முன்னிலையில் தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார்.
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் டாக்டர் ராஜா, ஏ. ஸ்டாலின், இளங்கோவன், பூமதி ஸ்டாலின், ஆவான் செந்தில் குமார், ராஜசூர்யா மற்றும் ஜெய்கிரண் ஆகியோர் பள்ளிக்குத் தேவையான பொருட்கள், கிரைண்டர், பெட்ஷீட்கள், வேட்டிகள் வழங்கினர்.
முகாமை அலகுத் தலைவர் பேராசிரியர் சந்திரா தங்கவேல் ஏற்பாடு செய்தார்.



