கோவையில் இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவரும் எஸ்ஆர்எம் கல்வி குழும நிர்வாகியுமான ரவி பச்சமுத்துக்கு வாழும் காமராஜர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஐஜேகே கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆனந்த முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சி கவுண்டம் பாளையம் தொகுதி தலைவரும், காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் இயக்குனருமான என்.கே.ஆர்.ராஜா ராமச்சந்தி ரன், இந்திய ஜனநாயக கட்சி யின் கோவை மாவட்ட வடக்கு தொகுதி தலைவர் எஸ்.கே.சந்தான குமார், கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் கே.மணிமாறன் ஆகி யோர் வாழும் காமராஜர் விருதினை ரவி பச்சமுத்துக்கு வழங்கி கௌரவித்தனர்.



