பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காலை 9.00 மணிக்கு பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தருவைக்குளம் தூய மிக்கேல் தொடக்கப்பள்ளி, தூய மிக்கேல் ஆங்கிலப் பள்ளி, தூய கேத்தரின் தொடக்கப்பள்ளி, லூர்து அன்னை மழலையர் பள்ளி மற்றும் டிடிடிஏ தொடக்கப்பள்ளி மாணாக்கருக்கு இனிப்பு வழங்கியும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர் மற்றும் ஆசிரியருக்கு பரிசுகள் வழங்கியும் கொண்டாடப் பட்டது.
தொடர்ந்து 2 வது ஆண்டாக தருவைக்குளம் அரசு மேனிலைப்பள்ளி யில் 2024&-2025ம் கல்வி யாண்டில் அதிக மதிப் பெண் பெற்ற 10 ம் வகுப்பு மாணாக்கர் 4 பேருக்கு தங்க நாணயங்களும், 8 பேருக்கு வெள்ளி நாணயங் களும், 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1 மாணவருக்கு வெள்ளி நாணயமும் வழங்கப்பட் டது.
பின்னர் சாதனையாள ருக்கு விருது வழங்கும் நிகழ்வில் தமிழன் தொலைக்காட்சி செய்தியா ளர் ரவிக்கு பெருந்தலைவர் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
நிகழ்வில் தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகளான தலைவர் அனிட்டன், பொருளாளர் தேவ திரவியம், துணைத் தலைவர் வில்சன், துணைச் செயலாளர் நீக்குலாஸ், மகளிர் மன்றத் தலைவி ஜெயமேரி, அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை சுமதி, தூய மிக்கேல் ஆலய உதவிப் பங்குத்தந்தை விவேக், பிச்சையா, கென் னடிராஜ், சுதன்ராஜ், சேவியர், பெருந்தலைவர் வாகன ஓட்டுநர்கள் சங்க தலைவர் ஜேசுராஜா, செயலாளர் பொன் சிங், மன்ற ஒருங்கிணைப்பாளர் அசோகன், அமைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட அமைப் பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



