Homeபிற செய்திகள்ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்- கலெக்டர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்- கலெக்டர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டத்தில் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகளை ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.


இதனைத்தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத் துவமனை அருகிலுள்ள பழைய தாலுகா அலுவ லக வளாகத்தில் விரி வாக்க பணிகளுக்கான ஆரம்ப கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தையும் நேற்று மாவட்ட ஆட்சி யர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அங்கு மருத்து வமனை விரிவாக்கத்திற் கான கட்டிட அமைப்பு குறித்து கட்டிட பிரிவு பொதுப்பணித் துறையினரிடம் கேட்டறிந்தார். புதிய கட்டிடம் அமையும் இடம் நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என்பதால் பயன்பாடற்று இருக்கும் பழைய தாலுகா அலுவலக கட்டிடங்களை இடித்துவிட்டு போதிய இட வசதியுடன் மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் அமைய வேண்டும் என பொதுப்பணித்துறை யினருக்கு உத்தரவிட்டார்.


மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு என புதுக்குடியில் செயல்படும் புதிய தாலுகா அலுவலகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தீயணைப்புத் துறையினர் அங்கு உடனடியாக செல்ல வேண்டும் எனவும் ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார்.


அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பழைய தாலுகா அலுவலகம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை இடம் மாற்ற வேண்டுமென ஆட்சியரி டம் கோரிக்கை விடுத்தனர்.

ஆய்வின்போது, ஸ்ரீவை குண்டம் தாசில்தார் ரத்னசங்கர், அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் ஆத்தி குமார் மற்றும் பொதுப்பணித் துறையினர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img