இந்திய தொழில் வர்த்தக சபை கோயம்புத்தூர் மண்டலத்தின் சார்பில், 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடந்து வரும் “உழவே தலை” என்ற விவசாய கருத்தரங்கு, இந்த ஆண்டு 7வது பதிப்பாக வரும் ஜூலை 13 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்தான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் பி.லுந்து, கௌரவ செயலாளர் பிரதீப், துணைத் தலைவர் துரைராஜ், விவசாய பிரிவு உறுப்பினர் மணி சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நிகழ் வின் முக்கியத்துவம், உள்ளடக்கம் மற்றும் விவசாயிகளுக்கான பயன்கள் குறித்து விளக்க மளித்தனர்.



