கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவியர் மன்ற தொடக்க விழாவானது (Union Inaugural) கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாகத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோரின் முன்னிலையில், மாணவியத் தலைவிகளுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக, கோவையில் உள்ள ரூட்ஸ் குழும நிறுவனங்களின் நிறுவன இயக்குநர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கல்வி மூலம் பெண்கள் அடையும் ஆளுமைத் திறன் மற்றும் பெண்களிடையே தலைமைத் துவப் பண்புகளை வளர்ப்பது என்ற முக்கியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு, உரை நிகழ்த்தினார்.
வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தலைமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். கல்லூரியில் செயல்பட்டுவரும் கிளப்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ உறுப்பினர்கள் ஒளிரும் மெழுகுவர்த் திகளை ஏந்தி, பாதையை ஒளிரச் செய்து, மாணவியர் சமூகத்தை வழிநடத்தும் தீபமேற்றுபவர்களாக தங்கள் பங்களிப் பைக் காட்டினர்.
விளக்கேற்றும் விழாவைத் தொடர்ந்து, கல்லூரியின் செயலர், முதல்வர் மற்றும் விழாவின் சிறப்பு விருந்தினர் ஆகியோர் மாணவியர் மன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பேட்ஜ்களை வழங்கினர். பதவி ஏற்றுக்கொண்ட மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு தங்கள் உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்ப டுத்தினர். நிர்மலா மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு ஒரு முழுமையான அதிகாரமளிக்கும் ஆளுமைப் பண்பினை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சியானது நடைபெற்றது.



