கேம்போர்டு சர்வதேச பள்ளியில் மாணவ தலை வர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை சூலூர் விங் கமாண்டர் பற்குணன் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் மாணவ தலைவர்கள் அதிகாரப் பூர்வமாக பதவி ஏற்று கொண்டனர். பள்ளி மாணவர் தலைவராக துரோணா செந்தில் மற்றும் பள்ளி மாணவி தலைவியாக சாச்சி கோல்ச்சாவும் மற்றும் பல்வேறு அணித்தலைவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து விங் கமாண்டர் பற்குணன், தலைமைத்துவத்தின் சாராம்சத்தை விளக்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ஒழுக்கம், வழிநடத்தும் தைரியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பள்ளியின் துடிப்பான சூழலை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அறிவுறுத்தினார். தலைமைத்துவம் என்பது தொடர்ச்சியான கற்றல் மற்றும் அனுபவத்தால் உருவாக்கப்பட்ட பயணமாகும் என்றும் வலியுறுத்தினார்.
உண்மையான தலைவர்கள் மற்றவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், ஒரு குழுவாக ஒன்றாக எழுச்சி பெறுவதையும் எடுத்துக்காட்டி, மாணவர்களை கவனம் செலுத்தி, தகவமைத்துக் கொள்ளும் படி ஊக்கப்படுத்தினார்.
பின்னர் காட்சிப்படுத்தப்பட்ட கலாச்சார திறமைகளை பாராட்டி, விங் கமாண்டர் பற்குணன் இசை மற்றும் நடனத்தில் மாணவர்களின் திறமைகளை பாராட்டினார்.
இதில் பள்ளித்தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் டாக்டர் பூனம் சயால் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.



