fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரியில் வெற்றிக்கான பாதுகாப்புப் படிகள் என்ற தலைப்பில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நிர்மலா கல்லூரியில் வெற்றிக்கான பாதுகாப்புப் படிகள் என்ற தலைப்பில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி களுக்கான அறிமுகப் பயிற்சி வகுப்பின் நிறைவாக “வெற்றிக்கான பாதுகாப்புப் படிகள்” என்ற தலைப்பில் தன்னம் பிக்கை மற்றும் குடிமைப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தலைமை சிறப்பு விருந்தின ராக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மாணவிகளிடையே வாழ்க்கையின் வெற்றிப் பாதையை வகுத்துக் கொள் வதற்கான வழிவகைகளை எடுத்துரைத்து, ஊக்கமளிக் கும் செய்திகளை வழங்கினார். அவர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொது நலனை உறுதி செய்வதில் காவல் துறை யின் அர்ப்பணிப்பு முயற்சிகளை எடுத்து ரைத்தார். கோவையில் உள்ள ஆர்.டி.என்.எஸ். அல்மைட்டி ஜெம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுந்தர், கல்லூரியில் வழங்கப்படும் வாய்ப்புக ளைப் பயன்படுத்தி குறிக் கோள்களை வாழ்க்கையாக மாற்ற மாணவிகளை ஊக் குவித்தார். நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா கல் லூரியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக் கான பயிற்சி வகுப்புகளைப் பற்றி விளக்கினார்.

ஆர்வமுள்ள மாணவிக ளுக்கு அரசு வேலை வாய்ப்பிற்காக கல்லூரி நிர் வாகம் நிர்மலா ஐ.ஏ.எஸ் அகாடமி என்ற பயிற்சி வகுப்பினை நிறுவியுள்ளது, என்று பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் தொடர்ச் சியாக கோவை பந்தய சாலை காவல் ஆய்வாளர் கந்தசாமி மாணவிகளின் பாதுகாப்பு குறித்த செய்திகளை வழங்கினார்.
போலீஸ் அக்கா பவானியை அறிமுகப்ப டுத்தி மாணவிகள் குற்றச் செயல்பாடுகளிலிருந்து காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்து ரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img