fbpx
Homeபிற செய்திகள்‘நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி’ திட்டம்: மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து கண்காணிக்க கடலூர் மாவட்ட...

‘நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி’ திட்டம்: மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து கண்காணிக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

“நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தின் மூலம் நடை பெறும் சிறப்பு வகுப்புகளை கடலூர் முதுநகர், சங்கரன் தெரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சான்றோர்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தியாளர் பயணமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், மிதிவண் டிகள் உள்ளிட்ட அடிப்படை நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.


2024-2025ஆம் கல்வி ஆண்டில் 6,7,8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்க ளின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் 275 நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 14,829 மாணவர்களுக்கு அடிப்படைத் திறனறி தேர்வு நடத்தி, சிறப்பு கவனம் தேவைப்படும் 3,536 மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. அவ்வாறு அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அடிப்படை திறன்களை மேம்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டதால் அவர்களில் கற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


அதனடிப்படையில் இக்கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி (என்கேகேடி) என்னும் சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு தேவையான அடிப்படை கற்றுக் கொடுப்பதாகும். மாணவர்களை தேர்வு செய்வதற்காக 10.06.2026 அன்று அடிப்படைத் திறனறித் தேர்வு 41,723 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

அதில் குறைந்த மதிப்பெண் பெற்ற 9,197 மாணவர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட மாணவர்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியர்களை கொண்டு தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாடவாரியாக கால அட்டவணைப்படி 3 மாத காலம் நடைபெறுகிறது. இத்திட்டத் தின் வாயிலாக நடைபெறும் பயிற்சி வகுப்புகளை துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டுள்ளது.


கோடை விடுமுறையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது விடுமுறை நாட்களை பயனுள்ளதாகவும் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பி னால் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இதுபோன்ற கற்றல் திறனுடன் விளையாட்டு உள்ளிட்ட பிற திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் கோடை விடுமுறை நாட்கள் மட்டுமன்றி தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஆய்வின் போது, வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், தலை மையாசிரியர்கள் கிரிஜா, ரெஜினா ஜெயமோகனா, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img