பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் மருத்துவர்.R.குமாரசாமி, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் A.வெங்கடாச்சலம் தலைமை வகித்தனர்.
இவ்விழாவிற்கு கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா மிஷன் தவத்திரு.சுவாமி நாராயணந்தாஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அறக்கட்டளையின் நிர்வாகிகள் பழனிச்சாமி, கிருஷ்ணன், இளங்கோ, தேவராஜா, கல்லூரி முதல்வர் ராகவேந்திரன், துணை முதல்வர் செந்தில்குமார், மூத்த விரிவுரையாளர் பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் ஏப்ரல் வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணக்கர்கள் 13 பேருக்கு பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.



