சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்சவம் திங்கள்கிழமை (ஜூன் 23) இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது 10 நாள்கள் நடைபெறுகிறது.
நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் திங்கள்கிழமை இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடி யேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் யு.எல்.சிவகைலாஸ் தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்த பின்னர், பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.
ஜூன் 24-ஆம் தேதி (நாளை) வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 25-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 26-ஆம் தேதி வெள்ளி பூத வாகன வீதிஉலா, 27-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 28-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 30-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறும்.
ஜூலை 1-ஆம் தேதி தேர்த்திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறும். ஜூலை 2-ஆம் தேதி அதி காலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபி ஷேகம் நடைபெறும்.
பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர், பிற்ப கல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூலை 3-ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉ லாவும், ஜூலை 4-ஆம் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் முடிவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் குழுச் செயலர் த.சிவசுந்தர தீட்சிதர்,துணைச் செயலர் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.



