இராணிப்பேட்டை நகர தி.மு.க. இளைஞர் அணி சார்பில் வார சந்தை மைதானம் திருவள்ளுவர் சிலை அருகில் தி.மு.க. அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் பி.பூங்காவனம் தலைமை தாங்கினார்.
நகர இளைஞர் அணி அமைப்பாளர் அஜ்மல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி,
திரைப்பட நடிகர் வாசு விக்ரம் ஆகியோர் கலந்துகொண்டு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினர்.
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா, நகர துணை செயலாளர் ஏர்டெல்குமார், பொருளாளர் அமீத், பிஎல்டி சிவா, நகர மன்ற உறுப்பினர்கள், நகர, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



